யக்கபிட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இளைஞர் ஒருவரை காலால் எட்டி உதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி தொடர்பில் ஐவரடங்கிய இராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரைகள் கிடைக்கப் பெறும் வரை அவரை சகல பணிகளிலிருந்தும் நீக்குவதற்கு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே நடவடிக்கை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இராணுவப்படைப் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து, வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இராணுவ அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, மேற்கு பாதுகாப்புபடைத் தலைமையகத்தினால் ஐவரடங்கிய இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

