யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்

16 0

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட்டி எனவும் காங்கேசன்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த மூதாட்டி அணிந்திருந்த நகைகள் எவையும் திருட்டுப்போகாத நிலையில் கொலைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர், மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை கண்டு காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.