3 அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்பால் ஊட்டியதை நினைத்து பெருமையடைகிறேன் – அநாகரீகமான செற்பாடுகளுக்கு ஹிருணிக்கா பதிலடி

16 0

எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமையடைகிறேன். 3 அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்பால் ஊட்டியுள்ளேன்  என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு 7 பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் நேற்று ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது, பொலிஸாருடனான மோதலின்போது அவரின் மார்பகம் வெளிப்பட்டமை தொடர்பில் சிலர் கேலி கிண்டல் செய்ததையடுத்து ஹிருணிகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்டுள்ள பதிவொன்றில்,

;நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்! மூன்று அழகான குழந்தைகளுக்கு நான் தாய்ப்பாலூட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களை சௌகரியப்படுத்தினேன். என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்.

;பொலிஸாருடனான மோதலின் காரணமாக எனது வெளிப்பட்ட மார்பகங்களை கேலி செய்பவர்களும் குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் தாய்மார்களின் முலைக்காம்புகளை உறிஞ்சியிருப்பார்கள் என நம்புகிறேன். எவ்வாறெனினும் என் மார்பகங்களைப் பற்றி நீங்கள், பேசும்போது, மீம்ஸ் உருவாக்கும்போது, சிரிக்கும்போது, எங்கோ ஒரு வரிசையில் நிற்கும் இன்னொரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!” என குறிப்பிட்டுள்ளார் .