ரணிலுக்கு எதிராக ஹிருணிக்கா ஆர்ப்பாட்டம் ; பெண்மை, தாய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் பிரதமர்

85 0

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அநாகரீகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட  வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஒழுக்கமான சமூகத்தில் தாய்மையை கொச்சைப்படுத்தப்படக் கூடாது . எல்லாவற்றிற்கும் முன்பு தாய்மை என்பது மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் ஹிருணிக்கா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவரது மார்பங்கள் வெளியில் தென்பட்டமை தொடர்பில் எடுக்கப்பட்ட அநாகரீகமற்ற மோசமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

”ஹிருணிக்கா எனது வீட்டிற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தமை அரசியல் காரணங்களுக்காகவே. அதை நாகரீகமாக , கருத்தினால் அணுகவேண்டும். பெண்மையை ,தாய்மையை கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.