ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தமைக்கு எதிராக ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

157 0

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தமைக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் இவ்வாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரனிந்து சேனாரத்ன, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த 9 பேரில் 7 பேர் தமது சட்டத்தரணிகள் ஊடாக மருதானை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம்  சரணடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.