தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

15 0

பொது மக்களுக்கான மின்சார விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும் வண்ணம் எந்தவொரு தொழிற்ச்சங்க நடவடிக்கையிலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவதை தடுத்து, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் விதித்த ; இடைக்கால தடை உத்தரவு  எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது .

;இன்று (22) கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இலங்கை மின்சார சபை தாக்கல் செய்த முறைப்பாட்டை இன்று மீளவும் ஆராய்ந்தே நீதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

அதன்படி ; எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி வரையில் ; இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம், அதன் அலுவலக ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் எந்தவொரு வேலைநிறுத்தம் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

;இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதுருவ, சங்கத்தின் செயல தம்மிக விமலரத்ன ஆகியோருக்கு குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

;இந்த முறைப்பாட்டை பதிவு செய்த இலங்கை மின்சார சபைக்காக, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தல் பிரகாரம், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகளான ருவந்த குரே , நாக்மி நபாத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

இந்த முறைப்பாடானது எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு தமது ஆட்சேபனைகளை மன்றில் முன் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 9 ஆம் திகதி, குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அது தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.