தலிபான்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகரிப்பு: இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் கவலை

145 0

லிபான்கள் ஆட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஃபரித் மாமுண்ட்சாய் கூறும்போது, “ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதலே நாடு முழுவதும் பயங்கரவாதங்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கனின் தலைமுறைகள் இருண்ட தருணங்களைச் சந்தித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளுடன் சமரசமான உறவில் தலிபான்கள் உள்ளனர். ஆப்கனில் ஐஎஸ்ஏ தீவிரவாத அமைப்புக்கு பலம் அதிகரித்து இருக்கிறது. ஐஎஸ்ஏ அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அய்-காய்தாவும் பலம் பெற்று வருகிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும்வரை அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும். அரசியல் களத்தில் எந்த மாற்றமும் நிகழாதவரை இது இவ்வாறே தொடரும்.