ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒருபோட்டிபோல மாறியுள்ளது- சிறிசேன

252 0

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒருபோட்டிபோல மாறியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதியாகவும் ரணில்விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்தவேளை காணப்பட்டது போன்ற நிலைமை தற்போது காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஒருங்கிணைப்பு பரஸ்பர புரிந்துணர்வு ஐக்கியம் இல்லை என்பது தெளிவான விடயம் என தெரிவித்துள்ள சிறிசேன இதன்காரணமாகவே கோத்தபாய ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது நாட்டையும் அதன் மக்களையும் புரிந்துகொள்ளமுடியாத புதைகுழிக்குள் இட்டுச்சென்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது தனித்தனியாக அரசாங்க அதிகாரிகளை பிரதிநிதிகளை தொழிற்சங்கத்தினரை சந்திப்பதை சந்திப்பதை உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் எனவும் மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

தங்களது செயற்பாடுகளில் அவர்கள் தோல்வியடைந்துள்ள போதிலும் ஒருவருக்கொருவர் சவால் விடும் விதத்தில் அவர்கள் ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்,ஒருவரையொருவர் தோற்கடிப்பதற்கான போட்டியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரோ என எண்ணத்தோன்றுகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியுள்ளது போல அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதே யதார்த்தபூர்வமான தீர்வு என மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.