அவுஸ்திரேலியாவில் முதல் தடவை தடுப்புமுகாமிற்கு வெளியே பிறந்தநாளை கொண்டாடிய தமிழ் சிறுமி

46 0

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தின் இளைய மகள் முதல்தடவை தனது பிறந்தநாளை அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமிற்கு வெளியே கொண்டாடியுள்ளார்.

குயின்ஸ்லாந்தின் மத்திய பகுதி நகரான பயோலாவில் உள்ள பூங்காவில் நடேசலிங்கம்குடும்பத்தின் ஆதரவாளர்களுடன் பிங்க் நிற உடையணிந்து தருணிகா தனது பிறந்தநாளை கொண்டாடினார்

2018இல் இந்த நகரில் அவர்கள் வாழ்ந்தவேளை பிரிட்ஜிங் விசா முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்கள் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்தினை பெறுவதற்கான தகுதியை பெறவில்லை என தெரிவித்து அதிகாரிகள் அவர்களை மெல்பேர்ன் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுப்புமுகாமில்வைத்திருந்தனர்.பேர்த்தில்  சமூக தடுப்பில் வைக்கப்பட்டனர்.

புதிய தொழில்கட்சி அரசாங்கம் தலையிட்டு அவர்களை விடுவித்ததை தொடர்ந்து அவர்கள் பயோலா திரும்பியுள்ளனர்.

இலங்கை தமிழ் குடும்பத்தை வரவேற்பதற்கான பல நிகழ்வுகளில் ஒன்று தர்ணிகாவின் பிறந்தநாள்.

அந்த குடும்பத்தினருடனும் பரந்துபட்ட சமூகத்துடனும் இணைந்து பிறந்தநாளை கொண்டாட முடிந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர்களின் குடும்ப நண்பரும் ஹோம் டு பயோல பிரச்சாரத்தை சேர்ந்தவருமான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

>இங்குள்ள குழந்தைகள் நீண்டகாலமாக ஏன் தர்ணிக்கு பிறந்தநாளை கொண்டாடவில்லை ஏன் அவர் இங்கு வரவில்லை என கேட்டு வந்துள்ளனர் இறுதியாக இன்று அவர்களிற்கு அந்த விசேட நாள் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஓடிவிளையாடுவதை மற்றைய குழந்தைகள் போல மகிழ்ச்சியை அனுபவிப்பதை பார்ப்பது சிறப்பான விடயம் என அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்

பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களில் இருவர் நாங்கள் தருணியின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.நாங்கள் சில வருடங்களாக அவரின் பிறந்தநாளை அவர் இல்லாமல் கொண்டாடிவருகின்றோம் ஆனால் அவருடன் இணைந்து கொண்டாடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பயோலாவின் மூதாட்டி என அழைக்கப்படும் நடேசலிங்கம் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாட முடிந்தது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் அடைவதாக தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு இது எங்கள் நகரில் அவர்களின் புதிய ஆரம்பத்தின் தொடக்கம் இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தின் இளைய மகள் முதல்தடவை தனது பிறந்தநாளை அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமிற்கு வெளியே கொண்டாடியுள்ளார்.