தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:- நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற 13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதால் பள்ளிகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும் வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கதவுகள் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

