கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்க கூடாது

259 0

கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் மீனவ அமைப்புகளுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கின்ற நிலையில் நாட்டின் பகுதிகளை வேறு நாடுகளுக்கு விற்பனைக்கோ குத்தகைக்கு வழங்குகின்ற செயற்பாடுகளையோ செய்ய வேண்டாம் என்றார்.