ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

51 0

இலங்கைக்கு ஆச்சரியம் தேடித்தரும் விடயங்களில் “ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு”.

இலங்கையின் நீதித்துறையும், சட்டத்தரணிகளும் புரியப்பட்ட குற்றத்தை நிரூபிக்க வருடக்கணக்கில் உழைத்திருப்பர். தமது சட்ட அறிவைக் கொட்டித்தீர்த்திருப்பர். குறித்த குற்றத்தை நிரூபிப்பதற்காக பெரியதொரு அரச நிதி செலவழிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட – உறவுகளை இழந்த குடும்பத்தவர் கண்ணீரோடு நீதியை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு அலைந்திருப்பர்.

தம் உழைப்பை, பணத்தை செலவழித்திருப்பர். இவ்வாறானதொரு கூட்டுழைப்பின் பின்னர் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் அவர் சிறைக்கு சென்று ஒரு வருடத்திலோ, அல்லது சில மாதங்களிலோ எல்லாவிதக் குற்றங்களிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டவராக வெளியே வருவார் அந்தக் குற்றவாளி. இவ்வாறானதொரு குற்றநீக்க வேலையை ஜனநாயக முறைப்படி வாக்களிக்கப்பட்டுத் தெரிவான ஜனாதிபதி கொஞ்சமும் கூச்சமின்றி செய்துமுடித்திருப்பார்.

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

மன்னிக்கவே முடியாத இந்த காரியத்தை “ஜனாதிபதி பொதுமன்னிப்பு“ என அழகாகச் சொல்வர். உலகமே அதிசயித்துப் பார்க்கும் விடயமாக இது இருப்பினும், சர்வ வல்லமையுடைய ஜனாதிபதி முறைமையின் முதற்சாபம் இதுவேதான். இந்தச் சாயலில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான பலர் உள்ளனர். அதில் ஓர் உதாரணத்திற்காகக் கீழ்வரும் படுகொலைக் கதையைப் பார்க்கலாம்.

2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் சூனியப் பகுதியாக நாகர்கோவில் எழுதுமட்டுவால் மிருசுவில் பகுதிகள் இருந்தன.

எனவே இக்கிராம மக்களும், இக்கிராமங்களுக்கு அடுத்துள்ள கிராம மக்களும் இடம்பெயர்ந்து யாழ்.குடாநாட்டின் பிற பகுதிகளில் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறு மிருசுவில் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களில் ஒரு தொகுதியினர் பருத்தித்துறை நாவலர்மடம் பகுதியில் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இராணுவத்தின் அனுமதி பெற்றும் – பெறாமலும் சென்று வருவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

 

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

வீட்டுப் பொருட்களை எடுத்துவருவதற்காகவும், தேங்காய் மற்றும் உற்பத்திப்பொருட்களை எடுத்துவருவதற்காகவும் இவ்வாறு சென்று வந்தனர். இவ்வாறு சென்றவர்கள் தம் காணி பகுதியில் இருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் துடிப்புள்ள குடும்பஸ்தர் ஒருவர் தொடர்ந்து தேடுதல் நடத்தியபோது, அப்பகுதியில் அரைகுறையாக மூடப்பட்டிருந்த குழியொன்றுக்கு அருகில் ஒரு சோடி காலணிகள் காண்டார். அவருக்கு சந்தேகம் வலுப்பெறவே மூடப்பட்டிருந்த குழியை இரகசியமாகத் தோண்டினர். குழியினுள்ளே இளம்பெண்ணொருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அதனைக் கண்டவுடன் பயந்துபோனவர் அருகில் இருந்த இராணுவ முகாமில் முறையிட்டார்.

இராணுவமும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலமே அதுவென்றும் தாம் அதைப் புதைத்துவிட்டதாகவும் கூறி, முறைப்பாட்டாளரின் விபரங்களை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டது. இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்ட அவர், தன் தற்காலிக வசிப்பிடத்திற்குத் திரும்பி, அயலிலுள்ளவர்களுக்கு சம்பவத்தைக் கூறினார். அதனைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலத்தை அடையாளம் காணும் பொருட்டு 19.12.2000 அன்று சிலர் மிருசுவிலுக்குச் சென்றனர்.

ரகசியமாக இவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர் மக்களை கைதுசெய்தபோது தேங்காய்களைப் பறித்துக்கொண்டும், உரித்துக்கொண்டும், கொய்யாப்பழங்களை பறித்துக்கொண்டும் இருந்தனர். அவர்களைக் கைதுசெய்த இராணுவம் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்த்து கண்களையும், கைகளையும் கட்டி மோசமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஒவ்வொருவராகத் தூக்கி முட்கம்பி வேலியொன்றுக்கு அப்பால் தூக்கிவீசியுள்ளனர். அவ்வாறு தூக்கிவீசப்படும்போது மகேஸ்வரன் என்பவரது கண்கட்டு விலகிவிட்டது. தம்மை இராணுவம் படுகொலை செய்யப்போவதை ஊகித்துக்கொண்ட அவர் அங்கிருந்து ஓட்டமெடுத்தார். அவரைத் தவிர இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டுவிட்டனர்.

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

தப்பியோடியவர் மந்திகை வைத்தியசாலைக்கு அடிகாயங்களுக்கு சிகிச்சை பெற சென்றபோது, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பின்னர் இடம்பெற்ற பொலிஸ் விசாரணைகளில் தான் எண்மரையும் படுகொலைசெய்த இராணுவத்தினரை அடையாளம் காட்டுவேன் என்றார். அதனைத்தொடர்ந்து அவரின் சாட்சியமளிப்பின் வழியிலேயே சுனில் ரத்னாயக்க உள்ளிட்ட ஐந்து இராணுவத்தினர் படுகொலையாளர்களாக அடையாளம்காணப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில் தாம் வன்னியிலிருந்து புதிதாக வந்த இராணுவ அணியென்றும், விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் எனக்கருதியே எண்மரையும் சுட்டுக்கொன்றதாகவும், மேலதிகாரிக்குக் கேட்டுவிடும் என்பதனாலேயே தப்பியோடியவரை சுடவில்லை எனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு குற்றங்களை ஒப்புக்கொண்ட இராணுவத்தினர் மீதான விசாரணை 2015 ஆண்டு ஆனி மாதம் 25 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. இறுதி தீர்ப்பளிப்பை வழங்கிய கொழும்பு மேல்நீதிமன்றம், குற்றஞ்சாட்டபட்டுள்ள ஐந்து இராணுவத்தினரில் நால்வருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், சுனில் ரத்னாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவித்து, அவருக்கு மரணதண்டனையை வழங்குவதாகக் குறிப்பிட்டது. இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க ஐந்து வருடங்கள் சிறையில் இருந்தார்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த ஒரு பூரணை தினத்தில் அவர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்தார். ”எட்டுத் தமிழர்களைக் கொன்றார் எனச் சந்தேகிக்கப்பட்டவர்” என்ற தலைப்பின் கீழேயே இந்தச் செய்தியை எழுதிவந்த தெற்கின் ஊடகங்கள் அவரின் விடுதலையை பெரும் தேசத் தந்தையின் விடுதலை போல கொண்டாடித் தீர்த்தன.

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

அதற்கு அடுத்ததாக இன்னொரு உதாரணக் கதையையும் இவ்விடத்தில் நோக்கலாம். ராஜபக்ச குடும்பத்தினர் பலமாக இருந்த காலத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச் சந்திர, துமிந்த சில்வா ஆகியோர் அந்தக் குடும்பத்தினரின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தனர். திடீரென அவர்கள் இருவருக்குள்ளும் இடம்பெற்ற மோதலில் பாரத லக்ஸ்மன் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் குற்றத்தின் பேரில் துமிந்த சில்வா சிறைக்குள் சென்றார்.

சிறைக்குள் சென்று சில வருடங்களில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் வெளியேவந்தார். அவ்வாறு ஜனாதிபதி விடுவித்தமை தவறெனக் கருதி நீதித்துறையின் கதவினைத் தட்டிய அவரது குடும்பத்தினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் துமிந்த சில்வாவை மீளவும் சிறைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

 

 

 

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய சாதனையாக இவ்விடயம் பேசப்படுகின்றது. ஜனாதிபதியின் ஏக இறைமையையும் சுக்குநூறாக உடைத்துவிட்ட சம்பவமாக இது கொண்டாடப்படுகின்றது. சமநேரத்தில், வடக்கில் சிறுவனும், சிறுமியும் அநாதரவாக நின்று அழுதுகொண்டிருக்கின்றனர். ஆனந்த சுதாகரன் என அறியப்பட்ட அரசியல் கைதியின் பிள்ளைகளே இவர்கள்.

2008 ஆம் ஆண்டு கொழும்பிற்கு ஆயுதங்களைக் கடத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆனந்த சுதாகரன், தன் மனைவியோடு பிள்ளைகளை விட்டு சிறைக்குச் சென்றார். அவர் கைதுசெய்யப்பட்ட நாள் தொடக்கம் அவரது மனைவி மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக 2018 ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். நிராதரவான சிறுவர்களான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தந்தையையாவது தம்முடன் விட்டுவைக்குமாறு கெஞ்சினர்.

நல்லாட்சியின் நாயகனான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடக்கம், உள்ளூர் கிராமத் தலைவர்கள் வரையில் கெஞ்சிக் கேட்டனர். கண்ணீரால் கடிதம் எழுதினர். மரணச்சடங்களில் கலந்துகொண்ட தமது தந்தையின் மடியில் அமர்ந்துகொண்டு, அவரைத் தம்மிடமிருந்து பிரிக்கவே வேண்டாம் எனக் கதறியழுதனர். இவையெதற்கும் மனமிரங்காத அரசும், ஜனாதிபதியும் அவரை விடுவிக்கவேயில்லை.

 

வடக்கில் அநாதரவாக அழுது கொண்டிருக்கும் சிறுமியும் சிறுவனும்! ஹிருணிக்காவுக்கு ஒரு நீதி கிளிநொச்சிக்கு ஒரு நீதி

ஜனாதிபதியால் பொதுமன்னிப்பைக் கூட வழங்கமுடியவில்லை. கண்ணீரும், கவலையும் தோய்ந்துள்ள இந்தச் சிறார்கள் இன்னமும் தம் தந்தையை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கின்றனர். அவர்களால் நீதியின் கதவைத் தட்ட முடிகிறதே தவிர திறக்க முடியவில்லை. அவ்வாறு நீதியின் கதவை அவர்களுக்காகத் திறந்துவிடுவதற்கு, சட்டம் தெரிந்த ஆளுமையுள்ளவர்கள் களத்தில் இறங்கவில்லை. இதுவே, தெற்கில் ஹிருணிக்கா போல அரசியல் செல்வாக்கும், பண பலமும் உடையவர்களின் பிள்ளைகளாக இவர்கள் இருந்திருப்பின் ஆனந்த சுதாகரனை விடுவிக்கப் பலரும் களத்தில் இறங்கியிருப்பர். போராடியிருப்பர். நீதியின் கதவைத் திறந்திருப்பர். அது முடியாமல் போனமைக்கான பிரதான காரணம் எதுவென ஆராய்ந்தால், அந்த ஆய்வின் முடிவில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதம் தொங்கிக்கொண்டிருக்கும்.

நாடு என்னதான் சீரழிந்து குட்டிச்சுவராய்ப் போனாலும், சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்திற்கு சிறு கீறல் கூட விழாமல் தாங்கி வைத்திருப்பதில், அரசினது அனைத்துக் கட்டமைப்புக்களுக்கும் பெரும் பங்குண்டு. தெற்கின் ஊடகங்களுக்கு அதனைவிடப் பெரும் பங்குண்டு.

ஒரு பேச்சளவிலாவது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆனந்த சுதாகரனுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுவித்திருந்தால், அவரின் கடும்போக்குவாதம் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டிருக்கும். புலிகளுக்கு விடுதலை அளித்ததாக ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கும். இதற்கு அஞ்சியே பொதுமன்னிப்பு என்கிற புண்ணிய காரியம்கூட அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்திற்கு அஞ்சியே எந்த அரசியல்வாதியும், சட்ட ஆளுமைகளும் தமிழர் சார்பான விடயங்களை கேள்விக்குட்படுத்தி நீதியின் கதவைத் தட்டித்திறக்க அஞ்சுகின்றனர். இந்த அச்சம் மனதளவிலிருந்து நீங்காதவரை, புத்தரின் பெயரால் செய்யப்படும் எந்தப் புண்ணிய காரியத்திற்கும் பலாபலன்கள் கிடைக்கப்போவதில்லை. .