புதையல் தோண்டிய நால்வர் கைது

463 0

அம்பாறை- ரஜகம பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரஜகம- வீரக்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22  தொடக்கம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கல்தொட்ட, நுவரகல, வீரக்கொட, கந்தவலபிடிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.