தமிழக அரசின் உதவிப்பொருட்கள் வவுனியாவை சென்றடைந்தன

354 0

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்கள் இன்று (02) காலை ரயில் மூலம் வவுனியாவை சென்றடைந்தன.

இந்த உதவிப் பொருட்கள் வசதியற்ற தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு பன்னிரெண்டாயிரத்தி பதினைந்து, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு மூவாயிரத்தி ஐந்நூற்றி அறுபது, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்கு இரண்டாயிரம், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு நான்காயிரத்தி அறுநூற்றி எழுபத்தைந்து, உணவுப் பொதிகள் வவுனியா மாவட்டத்திற்கு மொத்தமாக இருபத்திரெண்டாயிரத்தி இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கான பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன

இந்த உணவுப் பொதிகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக்கொண்டு குறித்த பிரதேச செயலாளர்கள் , கிராம அலுவலகர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.