கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காட்டு யானையொன்று காயங்களுக்குள்ளான நிலையில் மீட்பு

264 0

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்,

இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று காயங்களுக்குள்ளாகிய காட்டு யானையை பார்வையிட்டனர்.

இதன்போது கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்

குறித்த ஸ காட்டுயானை 30 வயதுடையதாக மதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்
காயங்களுக்குள்ளாகிய காட்டு யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர்களினால் நாளை சிகிச்சையளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது தாய்க்கு காயம் ஏற்பட்டமையினால் குட்டியானை தனது தாயை விட்டு பிரியாமல் தாய்க்குப் பாதுகாப்பாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.<