பிரதான வீதியில் கவரக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், தந்தையும் மகனும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கவரங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புளையிலிருந்து அநுராதபுரம் நோக்கி வழிபாடுகளுக்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு கவரன்க்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 41 வயதுடைய தாயும் 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயம் அடைந்த தந்தையும் மகனும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் நால்வரும் தம்புள்ள-ரத்மல்கஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் கவரங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். .

