இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

301 0

பெறுமதி சேர் வரி உள்ளிட்ட இதர வரிகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரிகளும் நேற்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருள் வரியினை நிதியமைச்சு கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் தயிர்,வெண்ணெய் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்காக விதிக்கப்படும். சிறப்பு பொருள் வரி 1,000 ரூபாவிலிருந்து 2,000ஆயரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலேகிராம் அப்பிள் மீதான விசேட பொருட்கள் தீர்வை வரி 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலர் மற்றும் புதிய பேரீச்சம்பழம் இறக்குமதி வரி 200  ரூபாவினாலும், தோடம்பழம், திராட்சை, உலர் திராட்சை உள்ளிட்ட ஏனைய பழங்கள் மீதாக வரி 600 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.