அம்பாறையில் 76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

99 0

அம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுஎல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 67 வயதுடைய தேவாலஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.