கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இதனைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிப்பது மாத்திரமின்றி அதற்கும் அப்பால் செயற்படுவதற்கான அதிகாரங்களை வழங்கும் நோக்கில் குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

