சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

231 0

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரசூட்டில் பயணித்து கடற்படையை சேர்ந்த ஐவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளனர்.சுதந்திர தின நிகழ்வு பேரணியில் இணைந்திருந்த ஐவரே இவ்வாறு கடலில் விழுந்துள்ளனர்.

எனினும் கடற்படை படகில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 69ஆம் சுதந்திர தின நிகழ்வு நாளை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.