கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

302 0

 

முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

49 பேருக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் இன்றுமுதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.

60 வருடத்திற்கு மேலாக தாம் வசித்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக தாம் இடம்பெயர்ந்து சென்றதாக மக்கள் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்த நிலையில் பல போராட்டங்களை முன்னெடுத்தபோதும் இதுவரை தமக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.