உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்

170 0

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது.

உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து  ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது. ரஷிய ராணுவம் அந்த ஆயுதங்கள் வரும் வாகனங்களை இடைமறித்து அழிக்க முயற்சிக்கிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மறைமுக போருக்கு சமம் என்று ரஷியா கூறுகிறது.