லைவ் அப்டேட்ஸ்: ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு பயண தடை விதித்தது ரஷியா

172 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 88 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

22.5.2022
00.40: போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை ரஷியா கையாண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் உள்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயண தடை விதித்து ரஷியா உத்தரவிட்டுள்ளது.