முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நூல் சிறுவர்களின் கையெழுத்துப் பிரதியாக மே 18 தமிழின அழிப்பு நாளில் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

481 0

“ முள்ளிவாய்க்கால் முற்றம்”
எம் இனத்தின் வலிசுமந்த வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில் யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பேர்லின் பிரிவினரால் கடந்த பத்து வருடங்களாக “முள்ளிவாய்க்கால் முற்றம்” என்னும் நூல் சிறுவர்களின் கையெழுத்துப் பிரதியாக மே 18 தமிழின அழிப்பு நாளில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. இந் நூலில் சிறுவர்கள் தங்கள் கைப்பட எழுதிய தமிழ் மொழி, தமிழீழம், மாவீரர், முள்ளிவாய்கால் மண்டியிடாத வீரம் , வலி பற்றிய கவிதை கட்டுரை ஓவியங்கள் அடங்கியதாக அமையும். இதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தின் வலியையும், வேதனையும் அதன் நியாயத்தையும் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லும் என நம்புகிறோம்.