விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் மட்டக்களப்பில் வெளியீ;டு (காணொளி)

332 0

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அனுசரணையுடன் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கத்தால் எழுதப்பட்டுள்ள ஆயிரம் வேரும் அருமருந்தும் நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண இந்து ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கலைச்சுடர் கதிர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் திருமதி இ.ஸ்ரீதர் உட்பட சுதேச மருத்து திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது சிவயோகச்செல்வன் சாம்பசிவத்தினால் ஆசியுரை வழங்கப்பட்டதுடன் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் க.மகாலிங்கசிவத்தினால் வரவேற்புரையும், கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி செ.யோகராசாவினால் நூல் நயவுரையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் ஏற்புரையினை நூலாசிரியர் டாக்டர் க.விஸ்வலிங்கம் வழங்கியுதுடன் நூல் வெளியீடும் நடைபெற்றது.

ஆயிரம் மருத்து வேர்களின் பயன்களைத்தாங்கியதாக இந்த நூல் வெளியிடு செய்யப்படுவதுடன் இந்த நூலின் மூலம் நோயற்ற வாழ்வை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.