டென்மார்க்கின் கொல்பேக் நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

37 0

நேற்று புதன்கிழமை 11.05.2022 டென்மார்க்கின் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் திருப்பலிப் பிரார்த்தனை மிகவும் உணர்வுபூர்வமாக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதில் முள்ளிவாய்க்கால் நினைவு உருவப்படத்திற்கு விளக்கேற்றி பொதுமக்களால் வணக்கம் செலுத்தப்பட்டு, அருட்தந்தை மிக்கேல் பைன்கோவஸ்கி அவர்களினால் திருப்பலி கொடுக்கப்பட்டு பின்னர் தோத்திர பாடல்கள் பாடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.