டென்மார்க் வைல நகரில் முள்ளிவாய்க்கால் வார கவனயீர்ப்பு நிகழ்வு.

37 0

முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு Vejle நகர மக்கள் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை 11.05.2022 அன்று டென்மார்க்கின் வைல நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

எங்கள் மக்களிற்கு நடந்த இன அழிப்பை டெனிஸ் மக்களிற்கு வெளிப்படுத்தும் முகமாக இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்ந்த அவலங்களை, பதாகைகள் மற்றும் விபரண படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், 2009 ஆம் ஆண்டு நடந்த இன அழிப்பின் போது கொல்லப்பட்ட மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூறும் வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது.

தொடர்ந்து 12.05.2022 மற்றும் 14.05.2022 Aarhu, Herning நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளதோடு, எதிர்வரும் 18.05.2022 அன்று டென்மார்க்கின் தலைநகரில் கவனயீர்ப்பு பேரணியும் நடைபெறவுள்ளது.