அன்பு அண்ணாவே! என்னை மறந்துவிடு…- வன்னியூர் குருஸ் –

94 0

அன்பு அண்ணாவே! என்னை மறந்துவிடு
உன் இதயம் நெரிக்கும் என் நினைவுகளைக்
கருக் கொண்டு நீ காவிச் செல்லாதே..!
உன் தனிமை வாழ்வை அது தாக்கிவிடும்!

உன்னோடு விளையாடும் பொழுதினிப் புலராது
உன்னோடு உறவாட உயிர்பெற முடியாது..!
இன்னார் இவரென்று எமக்குள்ளே உணர்த்தாத
இன்னோர் ஜென்மத்தில் பிறந்தாலும் பயனேது..?

அம்மாவை, என்னை, அப்பாவை அன்று
ஆமிக்காரன் அழித்தானே கொன்று,
அண்ணா… நீ யாரோடு இன்று?
ஆறுதல் கொள் அதுதானே நன்று!

இப்படிக்கு உன் தங்கை

– வன்னியூர் குருஸ் –