ஏக்கமும் தவிப்பும்.- வன்னியூர் குருஸ் –

47 0

மூர்க்கம் கொண்ட படைகள் எங்கிலுமும்
தாக்கித் தமிழரின் குருதி குடித்திட …
தாங்காத் துயரில் தங்கள் முகம்பொத்தி
ஆங்காங் கிருந்து அழுததைப் பாருங்கள்!

நிறுத்த விரும்பாத அரக்கர்கள் வெறியாட்டம்
நீண்டு செல்வதை தடுப்பார் யாரோ..?
தரிக்க இயலாத் தவிப்பின் ஓட்டம்
தொடரும் நிலைக்குத் துணைதான் பாரோ..?

கதறி அழுதோம் கைகள் நீட்டினோம்
ஒருத்தர் கூட உதவிக்கும் இல்லையே..
உதறி விட்டரோ உலகோர் எம்மையென
ஏங்கிய தவிப்பினை இங்கே பாருங்கள்.

– வன்னியூர் குருஸ் –