நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

179 0

நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ஆரம்பத்தில் கொழும்பு, மேல் மாகாணம் முழுவதற்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பொலிஸ் ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காலிமுகத்திடல் பகுதியில் அமைதியின்மைஏற்பட்டது.

அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள “மைன கோ கம” போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக் களம் இரண்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த  மோதலில் காயமடைந்த 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கண்டியில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலும் அரச ஆதரவாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட நிலையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.