ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் கரு ஜயசூரியவின் மகள் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது.பின்னர் குறித்த விருது நேற்று மாலை கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை பிரஜை ஒருவருக்கு முதல் முதலாக உதய சூரியன் விருது கிடைத்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.மேலும், ஜப்பான் பேரரசர் மாளிகையில் அக்கிஹிதோ பேரரசரால் இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

