ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

625 0

லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மகளிர் விரைவு கோர்ட்டு இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டின் நீதிபதியாக சர்வமங்களா கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்தார்.இவர் பாலியல் வழக்குகள், கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நீதிபதி சர்வமங்களாவை திடீரென சஸ்பெண்டு செய்து சென்னை ஜகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டார்,

சஸ்பெண்டு செய்யப்பட்ட சர்வமங்களா, கடந்த 2013-ம் ஆண்டில் ஈரோட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அப்போது ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விசாரணை முழுமை பெறாததால் சர்வ மங்களா பணி ஓய்வு பெற்று விட்டால் வழக்கு திசை மாற வாய்ப்புள்ளதாக கருதி அவரை சஸ்பெண்டு செய்துள்ளதாக தெரிகிறது.லஞ்ச புகாரில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.