மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடிக் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த துப்பாக்கியொன்றை தகவலொன்றின் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 119 இற்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்ததன் பேரில் ஏறாவூர் பொலிஸார் விரைந்து செயற்பட்டு தேடுதலில் ஈடுபட்டனர்.
அவ்வேளையில் பயன்படுத்தத் தக்க வகையில் உள்ள ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று காட்டில் வீசப்பட்டுக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏறாவூர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 119 இற்குத் தகவல் தெரிவித்த மற்றொரு நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

