சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

226 0

யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் செந்தில்நந்தன், தென்மராட்சி பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

நாவற்குழிப் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் கடந்த 2010ஆம் ஆண்டு 53 சிங்களக் குடும்பங்கள் தெற்கிலிருந்து வந்து அத்துமீறிக் குடியேறின. இக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவெனவும் கடந்த அரசாங்கத்தினால் இராணுவ முகாமொன்றும் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் இப்பகுதியில் 200 தமிழ் குடும்பங்களுக்கும் 53 சிங்களக் குடும்பங்களுக்கும் குறித்த காணி பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் 5 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் சிங்கள மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டமை குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த எதிர்ப்புகளை மீறி இன்று குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

navatkuly-2navatkuly-4navatkuly-1navatkuly-5