பேலியகொட பகுதியில் நேற்றிரவு இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ;வர்த்தகர் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளில் அவரது வீட்டில் அமர்ந்திருந்த குறித்த வர்த்தகர் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படுவதை காட்டுகிறது
எனினும், அதிர்ஷ்டவசமாக குறித்த ஆயுததாரிகளின் இலக்கிலிருந்து குறித்த வர்த்தகர் தப்பியுள்ளார். இதையடுத்து குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

