அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் அரசியல் பேதங்களை தவிர்த்து இணைந்து செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து அரசியல் கட்சிகளும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

