மருந்து தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்!

399 0

மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனை சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சில மருந்துகள் 90 நாட்கள் வரை தாமதமாகலாம் எனவும் அதற்கமைவாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் சில மருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.