தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் காரை பயன்படுத்தும் சரத் வீரசேகர

245 0

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்தியதாக காரை தற்போது முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக சர்வதேச செய்தி சேவை ஒன்றின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். லேன்ட் குறூஸ்சர் ரக இந்த கார் வழக்கு பொருளாக நீதிமன்றத்தின் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற போதிலும் அதனை எப்படி அரசியல்வாதி ஒருவர் பயன்படுத்த முடியும் என ரங்க சிறிலால் என்ற பீ.பீ.சி செய்தி ஊடகத்தின் அந்த செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.