ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவானார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

160 0

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை. அதன் காரணமாக பாராளுமன்றத்தில்  ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவியும் அவருக்கு இல்லாமலாகி இருக்கின்றது.

அதன் பிரகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வகித்துவந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்படுள்ளார். சபை முதல்வர் பதவியை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் வகிக்கின்றார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்தின் பிரகாரம் ஆசனம் ஒதுக்கும்போது அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு அமைச்சு பதவி எதுவும் இல்லாத காரணத்தினால் அவருக்கு இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் இருந்துவந்த முன்வரிசை ஆசனமும் இல்லாமல்போயுள்ளது.