ஜனாதிபதி செயலக கட்டடத்தில் மின்னொளியினால் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்

220 0

அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் இப் போராட்டமானது 10வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு பாகங்களிலும் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்போது ஜனாதிபதி செயலக ககட்டடத்தின்  மேற்பகுதிகளில் மின்னொளிகளை ஒளிரச் செய்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery