கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை

151 0

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அதனை கையளிக்க நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை நடை பயணப் போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் குறித்த நடை பயணப் போராட்டம் மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலம் கொடுப்பதே நடை பயணப் போராட்டத்தின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.