நீரில் மூழ்கி இளைஞன் பலி!

436 0

காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.