நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் காயம்

245 0

நியூயோர்க் – புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில், அதரிகாரிகள் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்;

தேவேளை, புரூக்ளின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் தாக்குதலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.