தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை- தே.வைகுந்தன்(காணொளி)

447 0

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற, தென்னை பயிர்ச்செய்கையாளர்களுக்கான மானியங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் 400 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு மானியங்கள் வழங்கப்படுகின்றன.அதன் முதற்கட்டமாக 200 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு, கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மானியங்கள் வழங்குவதற்காக 2.5 மல்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காசோலை வழங்கும் நிகழ்வில் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் கபில கண்டவல, கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், தென்னை பயிர்ச்செய்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சத்தியேந்திரன். மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகோண்டனர்.