அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் பௌத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்

344 0

திருகோணமலை

அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட பௌத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாகத் திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு கோஷங்களை எழுப்பியபடி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை திருகோணமலை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ’74 வருடச் சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் ந.சுந்தரேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குடும்பமாய் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பி கொடு, கோட்டாபய மக்களை ஏமாற்றியது போதும் வீட்டுக்குச் செல், 74 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், குழந்தைக்குப் பால் இல்லை, வாகனத்துக்கு டீசல் இல்லை, அடுப்புக்கு காஸ் இல்லை, வீட்டிற்கு மின்சாரம் இல்லை, உயிர்வாழ வழி இல்லை, ராஜபக்சக்களை பாதுகாத்தது நல்லாட்சி நல்லாட்சிக்குப் பாதுகாப்பு ராஜபக்ச ஆட்சி, ரணில் பிணைமுறை மோசடி 15 பில்லியன், கோட்டாபய சீனிவரி மோசடி 15 பில்லியன், சஜித் மத்திய கலாச்சார நிதிய பணமோசடி 11 பில்லியன், போன்ற வாசகங்கள் பொறித்த சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery