ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் சர்வமத அமைதி வழி போராட்டம்

260 0

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் நடைபெற்றுள்ளது.

ஹட்டன் திருச்சிலுவை ஆலய முன்றலில் இன்று ஆரம்பிக்கப்பட்ட அமைதி வழி ஊர்வலம் ஹட்டன் நகர் ஊடாக புதிய ரயில் நிலைய கட்டிட முன்றலை அடைந்ததும் அங்கு சுமார் ஒரு மணித்தியாலம் பதாதைகளை ஏந்தி அமைதியாக நின்றவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் பொது மக்களுடன் திருச்சிலுவை ஆலய குருக்கள், இந்து மத குருக்கள், கன்னியாஸ்திரிகள் என சுமார் 400ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நியுமன் பீரிசும், சைவ மத குருக்கள் சந்திராநந்த குருக்களும் நமது நாட்டுக்கு நல்ல தலைவர்களைப் பெற்ற தரவேண்டும், நாட்டு மக்களின் வேதனையில் தாமும் பங்குபற்றவே இந்த அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம் செய்யப்படுவதாகத் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து நாடு மீள வேண்டும் என்பதற்காக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery