அரசியல் நோக்கிற்காக மாணவர்களை வீதிக்கு இறக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் : பந்துல

228 0

நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் அரசியல் நோக்கிற்காக மாணவர்களை வீதிக்கு இறக்குவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் [08.04.2022]வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் பொறுப்பை ஒரு தரப்பினருக்கு மத்திரம் பொறுப்பாக்குவதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதார நெருக்கடி, அரச முறை கடன் செலுத்தல், வெளிநாட்டு கையிருப்பு வரையறை , பொருளாதார மீட்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தொழினுட்ப குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானித்தது. 2016 ஆம் ஆண்டு  சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில்  வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பிலான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமான அதிகரிப்பு, மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க முறையான பொருளாதார கொள்கையை செயற்படுத்த வேண்டும். கடன் நிலைப்படுத்தல் குறைக்கப்பட வேண்டும். அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச நிதி உயர்வடைதல், நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்டது.

சர்வதேச நாணய&nbsp; நிதியத்தின் யோசனைகளை செயற்படுத்துவதாக நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது புதிய யோசனைகளை நாணய நிதியம் முன்வைக்கவில்லை.</p>
<p>தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் , நிதி நெருக்கடிக்கும் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘நிதி முகாமைத்துவ பொறுப்புச்சட்டம்’ முழுமையாக செயற்படுத்தாமலிருப்பது பிரதான காரணியாக காணப்படுகிறது.இனியாவது இச்சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி சமூக கட்டமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த கூடாது.குறுகிய அரசியல் நோக்கிற்காக மாணவர்களை வீதிக்கிறக்குவதை அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.