எல்லைச் சுவர் விவகாரம்: அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தளர்வை ஏற்படுத்தும்!

230 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், அமெரிக்காவிற்கும் மெக்ஸியோவிற்கும் இடையே எல்லைச் சுவர் அமைக்கும் திட்டமானது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் 11 முதல் 12 மில்லியன் சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்படுகின்றனர். அவர்களுன் 80 வீதமானோர் தொழில் ஈடுபட்டுக் கொண்டோ அல்லது தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்த்தோ காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், புதிய குடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்துவதனால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிரேஷ்ட பொருளியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடியேற்றவாசிகள் மீதான கட்டுப்பாட்டினால் மாற்று தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதில் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கும். இதனால், ஊதிய கொடுப்பனவுகள் அதிகரிப்பதுடன், விலைவாசிகளும் ஏற்றம் காணும் என்றார்.