யாழில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

247 0

யாழ் – துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்குச் சென்றுவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அராலி – செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery