நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (07) போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
“இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும்”, “எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம்”, “லோன் லீசிங் செலுத்த முடியாது; நிவாரணம் வழங்கு” மற்றும் “74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் பிரதான வீதி வரை பேரணியாக வந்து தங்களது ஆதங்கங்களையும் அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களையும் சட்டத்தரணிகள் எழுப்பினர்.



